தண்ணீர் நீரின் வகைகள் 1.மழைநீர், 2.ஆலங்கட்டிநீர், 3.பனிநீர், 4.ஆற்றுநீர், 5.ஊற்றுநீர், 6.பாறைநீர்,7.அருவிநீர், 8.அடவிநீர், 9.வயல்நீர், 10.நண்டுக்குழிநீர், 11.குளத்துநீர், 12.ஏரிநீர், 13.சுனைநீர், 14.ஓடைநீர், 15.கிணற்றுநீர், 16.உப்புநீர், 17.சமுத்திரநீர், 18.இளநீர் என தண்ணீரை 18 வகையா 'பதார்த்த குண சிந்தாமணி’ என்ற நூலில் தெளிவுபடுத்திச் சொல்லி வெச்சிருக்காரு 'தேரையர் சித்தர் '. இந்த 18 வகையான நீரோட குணத்தை காண்போம் : 1. மழைநீர் "சீதமுறுங் குளிர்ச்சி சேருமே சித்தத்துட போதந் தெளிவாய்ப் பொருந்துங்கா ணாதமோடு விந்தும் வளர்ந்துவரு மேதினியி லெவ்வுயிர்க்குஞ் சிந்துமழை நீராற் றெளி" அதாவது, மழை நீர் தான் உலகத்துல இருக்கிற தண்ணியிலேயே உயர்ந்தது. பூமியில வாழற எல்லா ஜீவராசிகளுக்கும் தேவையான உயிர்ச்சத்து மழை நீர்ல அடங்கியிருக்கு. இதைத் தொடர்ந்து குடிச்சு வந்தா அறிவு விருத்தியாகும், உடல் சூடு நீங்கும்னு தேரையர் சொல்லியிருக்காரு. இந்தத் தண்ணியைத்தான், முதல் நீராவும் தொகுத்திருக்கார். 2. ஆலங்கட்டிநீர் சில சமயம், மழை பெய்யும்போது, வானத்துல இருந்து பனிக்கட்டிங்க விழும். இந்த ஆலங்கட...
Posts
Showing posts from July, 2021